அமைச்சரின் காலில் விழுந்து கதறி அழுத பெண்ணால் பரபரப்பு
காஞ்சிபுரம் அருகே பெண் ஒருவர், தன் வீட்டுக்கு மின் இணைப்பு வேண்டும் என அமைச்சரிடம் காலில் விழுந்து கதறி அழுத சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஐயப்பன்தாங்கல் ஊராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.
இதனை ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்று தூய்மை பணியாளர்களுக்கு வழங்கினார்.
அப்போது அவ்வூராட்சிக்குட்பட்ட பகுதியை சேர்ந்த பஞ்சவர்ணம் என்ற பெண், தங்கள் வீட்டில் 15 வருடமாக மின் இணைப்பு இல்லாமல் அவதிப்படுகிறோம் என அமைச்சரிடம் கதறி அழுதுள்ளார்.
இதற்கு அமைச்சர் கையிலா கரண்ட் வைத்திருக்கிறேன் என கூறவே, அந்த பெண்ணும் அமைச்சரின் காலில் விழுந்து கதறி அழுதுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.