கள்ளக்குறிச்சி பள்ளியில் 3-வது தளத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள்

Kallakurichi School Death Kallakurichi
By Irumporai Dec 04, 2022 01:11 PM GMT
Report

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் மாணவி ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்த நிலையில் அந்த பள்ளியில் உள்ள மூன்றாவது தளத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

கள்ளகுறிச்சி சம்பவம்  

தனியார் பள்ளியில் நடந்த கலவரத்திற்கு பின்னர் நாளை ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி மீண்டும் திறக்கப்பட உள்ளது.

கள்ளக்குறிச்சி பள்ளியில் 3-வது தளத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள் | Kaniyamur School Sealed

இந்த நிலையில் எல்கேஜி முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் கொடுத்து பின்னர் அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சீல் வைப்பு

இந்த நிலையில் தனியார் பள்ளியில் உள்ள மூன்றாவது தளத்தை சீல் வைக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டதை அடுத்து அதிகாரிகள் மூன்றாவது தளத்தை மூடி சீல் வைக்கப்பட்டது.