திரும்ப வந்துட்டோம்னு சொல்லு; களமிறங்கிய போர் வீரர்கள் - ட்ரெண்டிங்கில் கனிமொழி கேங்!

Smt M. K. Kanimozhi Lok Sabha Election 2024
By Sumathi Jun 25, 2024 04:26 AM GMT
Report

 மஹூவா மொய்த்ரா எம்பி பகிர்ந்துள்ள பதிவு வைரலாகி வருகிறது.

 மஹூவா மொய்த்ரா

நாடாளுமன்றத்தில் 18-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் தொடங்கியது. முதல் 2 நாட்கள் புதிய எம்பிக்கள் பதவியேற்கின்றனர். இதில் 6 பெண் எம்பிக்கள் மீண்டும் வெற்றிபெற்றுள்ளனர்.

திரும்ப வந்துட்டோம்னு சொல்லு; களமிறங்கிய போர் வீரர்கள் - ட்ரெண்டிங்கில் கனிமொழி கேங்! | Kanimozhis Post With Women Mps Viral

அதன்படி, மேற்குவங்கத்தின் கிருஷ்ணா நகர் மக்களவைத் தொகுதியில் இருந்து மஹுவா மொய்த்ரா, மகாராஷ்டிராவின் பாராமதி தொகுதியில் இருந்து சுப்ரியா சுலே, தமிழ்நாட்டின் தூத்துக்குடி தொகுதியில் இருந்து கனிமொழி,

கரூர் தொகுதியில் இருந்து ஜோதிமணி, மத்திய சென்னை தொகுதியில் இருந்து தமிழச்சி தங்கபாண்டியன், உத்தரபிரதேசத்தின் மெயின்புரி தொகுதியில் இருந்து டிம்பிள் யாதவ் ஆகியோர் எம்பிக்களாக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் அனைவரும் எதிர்க்கட்சி களின் இண்டியா கூட்டணியை சேர்ந்தவர்கள்.

தலைவராவே நீடிக்கக்கூடாது..நல்லதில்லை - கடுமையாக விமர்சித்த கனிமொழி!!

தலைவராவே நீடிக்கக்கூடாது..நல்லதில்லை - கடுமையாக விமர்சித்த கனிமொழி!!

வைரல் பதிவு

இந்நிலையில், திரிணமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா பகிர்ந்துள்ள பதிவு ஒன்றில், “மக்களவையில் மீண்டும் களமிறங்கிய போர் வீரர்கள்! 2024 vs 2019” என்றுக் குறிப்பிட்டுள்ளார்.

திரும்ப வந்துட்டோம்னு சொல்லு; களமிறங்கிய போர் வீரர்கள் - ட்ரெண்டிங்கில் கனிமொழி கேங்! | Kanimozhis Post With Women Mps Viral

மேலும் கடந்த 2019-ம் ஆண்டில் எம்பிக்களாக பதவி வகித்த 5 பேரின் புகைப்படத்தையும், தற்போது களமிறங்கியுள்ள 6 பேரின் புகைப்படத்தையும் இணைத்துள்ளார்.

இதில், புதிய புகைப்படத்தில் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் கூடுதலாக இடம்பெற்றுள்ளார். இந்த புகைப்பட பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.