கொரோனா தடுப்பு பணியில் தீவிரமாக ஈடுபடும் கனிமொழி எம்.பி... மதுரையில் முதல்வருடன் விசிட்...
மதுரையில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பு ஆய்வுப் பணியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியும் தீவிரமாக ஈடுபட்டார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், அதன் தடுப்பு பணிகள் குறித்து 5 மாவட்டங்களில் ஆய்வு செய்துவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரை,திருச்சியில் ஆய்வு செய்து வருகிறார்.
இன்று காலையில் மதுரை ஆட்சியர் அலுவகத்தில் அதிகாரிகளோடு ஆலோசனை நடத்திய போது அவருடன் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியும் கலந்து கொண்டார். அப்போது தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த மற்றும் படுகாயமடைந்த குடும்பங்களின் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து மதுரை தோப்பூரில் நடைபெற்ற 500 ஆக்ஸிஜன் படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அந்நிகழ்விலும் கனிமொழி கலந்து கொண்டார்