‘இணைப்பு மொழி நாட்டை இணைக்கப் பயன்படாது, பிரிக்கத்தான் பயன்படும்’ : அமித்ஷாவின் கருத்துக்கு திமுக எம்.பி. கனிமொழி கண்டனம்

amitshah kanimozhimp hindinationallanguage amitshahfacesbacklash
By Swetha Subash Apr 08, 2022 11:57 AM GMT
Swetha Subash

Swetha Subash

in இந்தியா
Report

டெல்லியில் நடைபெற்ற பாரளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37 வது கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தி மொழியானது மத்திய அமைச்சரவையின் 70 சதவீத நிகழ்ச்சி பற்றிய தொகுப்புகள் எல்லாம் இந்தி மொழியில் உருவாக்கப்படுள்ளது.

வட மாநிலங்களில் 22,000-க்கும் அதிகமான இந்தி ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இந்திய பள்ளியில் பயிலும் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்தி மொழியை கற்பிக்க வேண்டும் அதே போல் இந்தி தேர்வுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனக் கூறினார்.

மேலும், இந்தி மொழியினை இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டதாகவும், இந்தி மொழியை உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்க வேண்டும் என கூறிய அமித்ஷா,

வெவ்வேறு மொழிகளைப் பேசும் மாநில மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும்போது, ​​அது இந்தியாவின் மொழியில் இருக்க வேண்டும் என தெரிவித்தார். 

அமித்ஷாவின் இந்த கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது இந்தியாவின் பன்முகத்தன்மையில் நடத்தப்படும் தாக்குதல் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியிருந்தது.

இந்நிலையில், ஆங்கிலத்துக்கு மாற்று மொழியாக இந்தியை ஏற்க வேண்டும் என்ற அமித்ஷாவின் கருத்துக்கு திமுக எம்.பி.கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இணைப்பு மொழி என்று ஒன்றைத் திணிப்பது நாட்டை இணைக்கப் பயன்படாது அது பிரிக்கத்தான் பயன்படும். ஒன்றிய அரசும் அமைச்சர்களும் இந்தி எதிர்ப்பின் வரலாற்றை, தியாகங்களைத் தெரிந்து கொள்ளவேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.