"தமிழகம் வெற்றிநடை போடவில்லை" - அதிமுக பிரச்சாரத்திற்கு கனிமொழி பதில்

india election dmk
By Jon Feb 13, 2021 04:47 PM GMT
Report

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்படவில்லை. இதற்கான பிரச்சாரங்களை அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமான முன்னெடுத்து வருகின்றன. வெற்றி நடை போடும் தமிழகம் என அதிமுக பிரச்சாரம் செய்து வருகிறது. அதே சமயம் விடியலை நோக்கி ஸ்டாலினின் பயணம் என்ற தலைப்பில் திமுகவினர் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் ஒரு அங்கமாக திருப்பூரில் திமுக எம்.பி. கனிமொழி பரப்புரை மேற்கொண்டார். அரசுப்பணம் ஆயிரம் கோடியில் விளம்பரம் செய்து அதன்மூலம் முதல்வர் மட்டுமே வெற்றிநடை போடுவதாக திமுக எம்பி கனிமொழி விமர்சனம் செய்துள்ளார். திருப்பூர் தெற்கு பகுதியில் பரப்புரைக்கு சென்ற அவர், திருப்பூர் குமரன் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

பின்னர் பேசிய கனிமொழி, தமிழகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுகாதார நிலையங்கள் அடிப்படை வசதிகள் இன்றி இருக்கிறது. அதிமுக ஆட்சியில் முதல்வர் மட்டுமே வெற்றிநடை போடுகிறார், தமிழ்நாடு வெற்றிநடை போடவில்லை என்று அவர் விமர்சனம் செய்தார்.