தொகுதி மறுவரையறை மசோதா: கனிமொழி எம்.பி விவாதம்

Smt M. K. Kanimozhi
By Fathima Apr 17, 2026 06:41 AM GMT
Report

மக்களவையில் கனிமொழி எம்பி உரையாற்றும் போது, தமிழ்நாட்டின் 8 கோடி மக்களின் குரலாக உரையாற்றி கொண்டிருக்கிறேன்.

மகளிர் இடஒதுக்கீடு மசோதா நேற்று தான் அரசிதழில் வெளியிடப்பட்டது, நாடாளுமன்றத்தில் விவாதம் நடக்கும்போதே அரசிதழில் வெளியிட வேண்டியது ஏன்?

அரசிதழில் வெளியானதற்கு பின்னர் எதற்காக விவாதத்தை நடத்திக் கொண்டிருக்கிறீர்கள்?

பிரதமரும், உள்துறை அமைச்சரும் சொல்வது ஒன்றாக இருக்கிறது, மசோதாவில் இருப்பது வேறாக இருக்கிறது.

தொகுதி மறுவரையறை மசோதா: கனிமொழி எம்.பி விவாதம் | Kanimozhi Talks About Delimination Bill

தொகுதி மறு வரையறை மற்றும் 33 சதவீத பெண்கள் இட ஒதுக்கீடு ஆகியவை இரண்டு ஒன்றாக இணைக்கப்பட்டு இருப்பது ஒரு பொறி.

இந்திய நாட்டுப் பெண்களை தேர்தல் தேவைகளுக்காக பாஜக பயன்படுத்துவது வெட்கக்கேடான விஷயம்.

மத்திய அரசின் குரலை ஏற்று தென்மாநிலங்கள் மக்கள் தொகையை கட்டுப்படுத்தி உள்ளன, 5 மாநில தேர்தல் பணிகளை குலைக்கவே அவசர அவசரமாக மசோதாக்கள் கொண்டு வரப்பட்டுள்ளன என ஆவேசமாக பேசினார்.