கனிமொழி கொரோனாவில் இருந்த குணமாக சிறப்பு யாகம்
கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து, தி.மு.க., மகளிர் அணி செயலர் கனிமொழி பூரண குணமடைய, அரியலுார் கடுகூர் கருப்பையா கோவிலில், நேற்று, அக்கட்சியினர் சிறப்பு யாகம் நடத்தினர். தி.மு.க., மகளிர் அணி செயலரும், எம்.பி.,யுமான கனிமொழி, தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து, தமிழகம் முழுதும், தேர்தல் பிரசாரம் செய்து வந்தார்.
அவருக்கு, கொரோனா தொற்று உறுதியானதால், நேற்று முன்தினம், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு முதல் நிலை தொற்று இருப்பதால், டாக்டர்களின் கண்காணிப்பில், சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், கொரோனா தொற்றில் இருந்து கனிமொழி, பூரண குணமடைய வேண்டி, அரசியலுார் மாவட்டம், கடுகூர் கிராமத்தில் உள்ள கருப்பையா கோவிலில், நேற்று சிறப்பு யாகம் நடந்தது.
மாணவரணி துணைச் செயலர் அப்பு ஏற்பாடு செய்திருந்த இந்த யாகத்தில், பெண்கள், ஊர் பொது மக்களும் பங்கேற்றனர்.