Once Upon A Time....மோடி முதல்வராக அன்றும் - பிரதமராக இன்றும்...! வீடியோ காட்டும் கனிமொழி

Smt M. K. Kanimozhi Tamil nadu Narendra Modi Gujarat
By Karthick Feb 09, 2024 10:50 AM GMT
Report

வரி பகிர்வு குறித்து தென் மாநிலங்களுக்கும் மத்திய ஆளும் பாஜகவிற்கு இடையேயும் கடும் முரண்பாடான போக்கு நீடித்து வருகிறது.

நிதி பகிர்வு

மத்திய அரசு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு நிதி பகிர்வை மிகவும் குறைவாக அளிப்பதாக பல எதிர்க் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

kanimozhi-slams-modi-cm-vs-pm

இந்த குற்றச்சாட்டை தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை அரை நூற்றாண்டிற்கு முன்பாகவே வைத்துவிட்டார்.

தமிழகத்தில் உள்ள எந்த குளத்திலும் தாமரை மலராது - கனிமொழி எம்.பி பேச்சு!

தமிழகத்தில் உள்ள எந்த குளத்திலும் தாமரை மலராது - கனிமொழி எம்.பி பேச்சு!

இந்த சூழலில் தான் காங்கிரஸ் ஆளும் கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, கம்யூனிஸ்ட் கட்சி ஆளும் கேரள முதல்வர் பினராயி விஜயன் முன்னெடுப்பில் அம்மாநில எம்.பி.க்கள் டெல்லியில் போராடினர்.

kanimozhi-slams-modi-cm-vs-pm

இதனை தொடர்ந்து வரி பகிர்வு விவகாரம் பெரிதாக விவாதிகப்படுகிறது. திமுகவின் துணை பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி பிரதமர் மோடி பற்றிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.


அந்த வீடியோவில், அப்போது குஜராத் மாநில முதல்வராக இருக்கும் மோடி, அப்போதைய மத்திய காங்கிரஸ் கட்சியின் நிதி பகிர்வை கடுமையாக எதிர்த்து உரையாற்றினார். இதனை பதிவிட்டுள்ள கனிமொழி, Once upon a time A CM now PM என தலைப்பிட்டுள்ளார்.