சி.வி.சண்முகத்தை தொடர்ந்து திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சை பேச்சு - சீறிய கனிமொழி
நயன்தாரா குறித்த சி.வி.சண்முகத்தின் பேச்சுக்கு திமுக எம்.பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.
நயன்தாரா குறித்த பேச்சு
திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் விழுப்புரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய அதிமுக மாநிலங்களவை எம்பி சி.வி.சண்முகம் நடிகை நயன்தாரா குறித்த சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார்.

இதில் பேசிய அவர், கனவை சொல்லுங்கள் நிறைவேற்றுகிறோம் என கேட்கிறார். எனக்கு நயன்தாரா வேண்டும். கனவை நிறைவேற்றுவாரா? நயன்தாராவை கல்யாணம் பண்ணி வைனு கேப்பான் இவர் கனவை நிறைவேற்றுவாரா? என கூறினார்.
இதற்கு வருத்தம் தெரிவித்த சி.வி.சண்முகம், "நயன்தாராவின் பெயர் தவறுதலாக உச்சரிக்கப்பட்டது; அதற்காக ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறேன்; முற்றிலும் தவறுதலாகவே வார்த்தை பயன்படுத்தப்பட்டது; எந்தவிதமான நோக்கத்துடனும் கூறப்படவில்லை" என தெரிவித்துள்ளார்.
இந்த பேச்சு சர்ச்சையான நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் பால பாரதி, காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, திமுக எம்.பி கனிமொழி, தென்னிந்திய நடிகர் சங்கம் ஆகியவை கண்டனம் தெரிவித்துள்ளது.


கனிமொழி கண்டனம்
திமுக எம்.பி கனிமொழி வெளியிட்டுள்ள பதிவில், அரசியல் நாகரிகமோ, அடிப்படை அறமோ அதிமுகவினருக்கு என்றும் இருந்ததில்லை.
அரசியல் நாகரிகமோ, அடிப்படை அறமோ அதிமுகவினருக்கு என்றும் இருந்ததில்லை. அதனால், பெண்களை இழிவு படுத்துவதையே வாடிக்கையாக வைத்திருக்கும் தனது கட்சியைச் சார்ந்த இந்த நபரின் அருவருக்கத்தக்கப் பேச்சுக்கு எதிர்க்கட்சித் தலைவர் நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்ப்பது வீண். https://t.co/qauc6cuFrC
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) March 17, 2026
அதனால், பெண்களை இழிவு படுத்துவதையே வாடிக்கையாக வைத்திருக்கும் தனது கட்சியைச் சார்ந்த இந்த நபரின் அருவருக்கத்தக்கப் பேச்சுக்கு எதிர்க்கட்சித் தலைவர் நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்ப்பது வீண்" என கூறியுள்ளார்.
சிவி.சண்முகத்தை தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதும் சர்ச்சையாகியுள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், "பெண்களுக்கு சேலை கொடுக்கின்றனர். ஆனால், சேலை கொடுத்தால் போதுமா? பாவாடை இல்லாமல் எப்படி கட்டுவது என பெண்கள் கேட்கின்றனர்" என பேசியதும் சமூக ஊடகங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.