தமிழ்நாட்டில் நடப்பது மக்கள் ஆட்சியா, ஜோதிடர் ஆட்சியா? கனிமொழி கேள்வி
kanimozhi slams cm vijay for new secretariat தமிழ்நாட்டில் நடப்பது மக்கள் ஆட்சியா, ஜோதிடர் ஆட்சியா? என திமுக எம்.பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாட்டில் நடப்பது ஜோதிடர் ஆட்சியா?
தமிழ்நாட்டில் புதிய புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்றம் கட்ட திட்டமிட்ட தமிழ்நாடு அரசு, சென்னை பட்டினப்பாக்கத்தில் இடம் தேர்வு செய்து, அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.

அங்குள்ள மீனவ மக்களின் கடும் எதிர்ப்பின் காரணமாக, அந்த திட்டத்தை சென்னை அண்ணா சாலையில் உள்ள பல்லவன் இல்ல வளாகத்திற்கு மாற்றுவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.
இந்நிலையில், புதிய தலைமைச் செயலகத்திற்கு பட்டினப்பாக்கத்தில் இடம் தேர்வு செய்ததற்கான ஆய்வு விவரங்கள் தங்களிடம் இல்லை என்று RTI மூலம் எழுப்பிய கேள்விக்கு தவெக அரசு பதிலளித்திருக்கிறது.
இதனை விமர்சித்துள்ள திமுக எம்.பி கனிமொழி, "தமிழ்நாட்டில் நடப்பது மக்கள் ஆட்சியா, ஜோதிடர் ஆட்சியா? என விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "புதிய தலைமைச் செயலகத்திற்கு பட்டினப்பாக்கத்தில் இடம் தேர்வு செய்ததற்கான ஆய்வு விவரங்கள் தங்களிடம் இல்லை என்று RTI மூலம் எழுப்பிய கேள்விக்கு தவெக அரசு பதிலளித்திருக்கிறது. அப்படியென்றால், இடத்தைத் தேர்வு செய்தது யார்?
புதிய தலைமைச் செயலகத்திற்கு பட்டினப்பாக்கத்தில் இடம் தேர்வு செய்ததற்கான ஆய்வு விவரங்கள் தங்களிடம் இல்லை என்று RTI மூலம் எழுப்பிய கேள்விக்கு தவெக அரசு பதிலளித்திருக்கிறது. அப்படியென்றால், இடத்தைத் தேர்வு செய்தது யார்? முதலமைச்சர் திரு. @TVKVijayHQ அவர்களா? இல்லை ஜோதிடரா? தமிழ்நாட்டில் நடப்பது மக்கள் ஆட்சியா, ஜோதிடர் ஆட்சியா?
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) October 22, 2026
முதலமைச்சர் திரு. விஜய் அவர்களா? இல்லை ஜோதிடரா? தமிழ்நாட்டில் நடப்பது மக்கள் ஆட்சியா, ஜோதிடர் ஆட்சியா?" என தெரிவித்துள்ளார்.