சீமானின் கேவலமான பேச்சு..அவரது வீட்டில் உள்ள பெண்கள் கேட்கணும்- கனிமொழி!
சீமான் பேசுவதைக் கேட்டுக்கொண்டு இன்னும் எப்படி பெண்கள் அவரது கட்சியில் தொடர்கிறார்கள் எனத் தெரியவில்லை திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
சீமான்
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்டத்தில் திமுக மகளிரணி சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,’’முதல்வர் பிறந்த நாளில் கழக நிர்வாகிகள் அனைவரும் உறுதிமொழியை நினைவு கூறும் வகையில் பல்வேறு ஏற்பாடுகளை அமைச்சர் சேகர்பாபு செய்துள்ளார்.
அதில் மொழிக்கான போராட்ட முன்னெடுப்பு, மாநில உரிமைகளை பாதுக்க முதல்வரின் வேண்டுகோளைக் கழக உடன்பிறப்புகள் இந்த நிகழ்ச்சியின் மூலம் மனதில் ஏற்றுக்கொள்கிறார்கள்.முதலமைச்சருக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை உங்கள் வழியாக நான் மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறினார்.
கனிமொழி
இதனையடுத்து சீமான் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது அவர்கள் வீட்டில் இருக்கும் பெண்கள் இதைப்பற்றிக் கேட்க வேண்டும்; கட்சியில் இருக்கும் பெண்கள் இதைக் கேட்க வேண்டும்.
பெண்களைக் கேவலமாகப் பேசுவதை எப்படி சகித்துக் கொண்டு அந்த கட்சியில் இருக்கிறார்கள் எனத் தெரியவில்லை என்று கூறினார். மேலும் இதைவிடப் பெரியாரைக் கேவலப்படுத்த முடியாது . அதனால் இதற்குப் பதில் சொல்லும் அளவிற்குத் தகுதி வாய்ந்த விஷயமே இல்லை என்று தெரிவித்துள்ளார்.