மொழியை அழிப்பதே சிறந்த வழி..ஜெகதீப் தன்கர் கருத்து- கனிமொழி பதிலடி!
துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர் கருத்துக்கு கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார்.
ஜெகதீப் தன்கர்
டெல்லியில் 98-வது அகில இந்திய மராத்திய இலக்கிய மாநாட்டில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் கலந்துரையாடினார்.
அப்போது பேசியவர்,’’ஒரு நிலத்தை கைப்பற்றுவதற்கு அதன் கலாசாரத்தை பின்னுக்குத் தள்ளி, மொழியை அழிப்பதே சிறந்த வழி.பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்தியாவுக்குள் படையெடுத்தவர்கள் இதைத்தான் செய்தார்கள் என்று கூறியிருந்தார்.
கனிமொழி
மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் தமிழ்நாட்டை மத்திய அரசு வஞ்சித்து வருவதாக திமுக குற்றம்சாட்டி வருகிறது.இந்த நிலையில், துணை குடியரசு தலைவர் கருத்துக்கு கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார்
இந்த சூழலில் 'ஜெகதீப் தன்கரின் இந்த கருத்தை மேற்கோள் காட்டியுள்ள நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி, "பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது" என குறிப்பிட்டு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.