நடிகை குஷ்பூ குறித்து திமுக நிர்வாகி ஆபாச பேச்சு - வருத்தம் தெரிவித்த கனிமொழி எம்.பி

Smt M. K. Kanimozhi DMK BJP Kushboo
By Thahir Oct 28, 2022 04:40 AM GMT
Report

நடிகை குஷ்பூ குறித்து ஆபாசமாக பேசிய திமுக நிர்வாகியின் பேச்சுக்கு திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி வருத்தம் தெரிவித்துள்ளார்.

குஷ்பூ குறித்து ஆபாச பேச்சு 

திமுக நிர்வாகியாக இருந்து வருபவர் சைதை சாதிக் இவர் கடந்த சில நாட்களாக மேடைகளில் பாஜக நிர்வாகிகள் பலரையும் விமர்சித்து வருகிறார்.இவரின் பேச்சுக்கு பாஜக நிர்வாகிகள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

சென்னை ஆர்.கே.நகரில் திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வுக்கு நன்றி பாராட்டும் பொதுக்குழு விளக்க கூட்டம் நடைபெற்றது.

இக்ககூட்டத்திற்கு அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமை தாங்கினார். அப்போது அமைச்சர் மேடையில் அமர்ந்திருந்த போது திமுக பேச்சாளரான சைதை சாதிக் என்பவர் பாஜக குறித்தும், பாஜக மகளிர் நிர்வாகிகள் பற்றியும் தகாத வார்ததைகளில் விமர்சித்துள்ளார். அவர் பேசியதை கண்டு அமைச்சர் சிரித்ததால் இந்த வீடியோ காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

நடிகை குஷ்பூ கண்டனம் 

இதுக்கு கண்டனம் தெரிவித்து குஷ்பூ தனது ட்விட்டர் பக்கத்தில், ஆண்கள் பெண்களை துஷ்பிரயோகம் செய்தால், அது அவர்கள் வளர்த்த விதமான வளர்ப்பையும், அவர்கள் வளர்ந்த நச்சு சூழலையும் காட்டுகிறது.

இந்த ஆண்கள் ஒரு பெண்ணின் கருப்பையை அவமதிக்கிறார்கள். அத்தகைய ஆண்கள் தங்களை #கலைஞரின் பின்பற்றுபவர்கள் என்று அழைக்கிறார்கள்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையின் கீழ் இதுதான் புதிய திராவிடமா” என்று கேள்வி எழுப்பியிருந்தார். மேலும், கனிமொழியையும் அவர் டேக் செய்திருந்தார்.

கனிமொழி வருத்தம் 

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக மன்னிப்பு கேட்டுள்ள கனிமொழி, ‘ஒரு பெண்ணாகவும், மனிதனாகவும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

யார் செய்தாலும், சொல்லப்பட்ட இடம் அல்லது அவர்கள் கடைபிடிக்கும் கட்சி எதுவாக இருந்தாலும் இதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது. திமுக இதை பொறுத்துக்கொள்ளாது.

எனது தலைவர் ஸ்டாலினின் காரணமாக இச்சம்பவத்திற்கு என்னால் வெளிப்படையாக மன்னிப்புக் கோர முடியும்’ என பதிவிட்டுள்ளார். 

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 3 Evening