நவீன இலக்கிய உலகில் திராவிடத்தின் முகம் இமையம் - கனிமொழி புகழாரம்

Smt M. K. Kanimozhi DMK
By Thahir 3 நாட்கள் முன்

எழுத்தாளர் இமயம் அவர்களுக்கு ‘குவெம்பு ராஷ்ட்ரிய புரஸ்கார்’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில், கனிமொழி எம்.பி  வாழ்த்து தெரிவித்துள்ளார்.

எம்.பி. கனிமொழி வாழ்த்து 

இதுகுறித்து தனது ட்விட்டர் பதிவில், அதிகார வர்க்கத்தால் ஒடுக்கப்படும் எளியவர்களின் உலகை தன் படைப்புகளில் கட்டி எழுப்பியவர் எழுத்தாளர் இமையம் அவர்கள்.

நவீன இலக்கிய உலகில் திராவிடத்தின் முகம் இமையம் - கனிமொழி புகழாரம் | Kanimozhi Mp Congrats Imayam

நவீன இலக்கிய உலகில் திராவிடத்தின் முகம். சமூக அமைப்புகளின் உள்ளடக்குகளை கீறிடும் எழுத்துகளால், தமிழ் மட்டுமல்லாது இன்று இந்திய இலக்கியத்தின் அடையாளமாகவும் இருப்பவருக்கு, இந்த ஆண்டிற்கான குவெம்பு தேசிய விருது அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அவருக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.