துடைப்பம், பிளிச்சிங்கபவுடர் திருடிய அதிமுக - கனிமொழி எம்.பி. கடும் விமர்சனம்
அதிமுக ஆட்சியில் பிளிச்சிங்பவுடர் முதல் துடைப்பம் வரை கொள்ளையடிப்பதை தான் பணியாக செய்தனர் என திமுக எம்பி கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை தொகுதி ஒன்றிய வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் திமுக மாநில மகளிரணி செயலாளரும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய கனிமொழி, திமுக ஆட்சி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சீரோடும் சிறப்போடும் பல தலைவர்கள், செய்தித்தாள்கள் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நாடுகளைச் சேர்ந்த ஊடகங்கள் பாராட்டும் வகையில் நடந்து வருவதாக தெரிவித்தார்.
மேலும் தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு வருவதாகவும், குறிப்பாகப் பெண்கள் முன்னேற்றத்திற்கு எவ்வித தடையும் இருக்கக் கூடாது என்பதற்காக நகர்ப்புற பேருந்துகளில் கட்டணமில்லா சலுகை வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
கடந்த அதிமுக ஆட்சியில் கொரோனா காலத்தைப் பயன்படுத்தி மக்களைப் பாதுகாக்காது பிளிச்சிங்பவுடர் முதல் துடைப்பம் வரை கொள்ளையடிப்பதில்தான் குறியாக இருந்தார்கள் என குற்றம் சாட்டிய கனிமொழி, அதிலிருந்து மக்களை மீட்டு பாதுகாப்பான ஆட்சி தற்போது நடந்து வருவதாக பெருமிதம் தெரிவித்தார்.