முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார் கனிமொழி

M K Stalin Government of Tamil Nadu
By Thahir Oct 06, 2022 07:10 AM GMT
Report

பஞ்சாயத்து ராஜ் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டதை அடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் கனிமொழி எம்.பி.

முதலமைச்சருடன் கனிமொழி சந்திப்பு 

மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் நிலைக்குழுவின் உறுப்பினர்களை நியமனம் செய்து மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டது.

அந்த அறிவிப்பில் மக்களவை உறுப்பினர்கள் 17 பேரும், மாநிலங்களவை உறுப்பினர்கள் 10 பேரும் மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்ராஜ் நிலைக்குழுவின் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார் கனிமொழி | Kanimozhi Meet With Chief Minister M K Stalin

இதன் பஞ்சாயத்ராஜ் நிலைக்குழுவின் தலைவராக திமுக மகளிரணி செயலாளரும், துாத்துக்குடி எம்.பியுமான கனிமொழி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.