‘இதெல்லாம் தப்பு... கால்ல விழக்கூடாது?’ காலை தொட்டு வணங்க முயன்ற சிறுமி - கனிமொழி எம்.பி. அறிவுரை

DMK
By Nandhini Oct 10, 2022 05:59 AM GMT
Report

காலை தொட்டு வணங்க முயன்ற சிறுமிக்கு கனிமொழி எம்.பி. அறிவுரை கூறியுள்ளார். 

திமுக துணை பொதுச்செயலாளராக கனிமொழி நியமனம்

15-வது திமுக பொதுக்குழு கூட்டம் நேற்று முன்தினம் அமைந்தகரையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக கட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் 2-வது முறையாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். திமுக துணை பொதுச்செயலாளராக கனிமொழி நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.

அதேபோல, திமுக பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர் பாலுவும் போட்டியின்றி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஐ. பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ் ஆகியோரும் திமுக துணை பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டிருக்கின்றனர். திமுக முதன்மை செயலாளராக கே.என்.நேரு நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.

தி.மு.க. துணை பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள கனிமொழி எம்.பி.க்கு அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் சமூகவலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள் அவரை நேரில் சந்தித்து பூக்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Kanimozhi

சிறுமிக்கு அறிவுரை கூறிய கனிமொழி

இந்நிலையில், தி.மு.க. துணை பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள கனிமொழியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க தாயுடன் வந்த சிறுமி திடீரென கனிமொழி காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க முயற்சி செய்தார். அப்போது, பதற்றமடைந்த கனிமொழி எம்.பி... என்னம்மா.. இது.. இப்படியெல்லாம் காலில் விழக்கூடாது... இதெல்லாம் தப்பு... என்று சிறுமிக்கு அறிவுரை கூறினார்.