கனிமொழி கணவர் அரவிந்தன் மருத்துவமனையில் அனுமதி : சோகத்தில் கட்சியினர்
திமுக எம்பி கனிமொழியின் கணவர் அரவிந்தன் சென்ன்ஃஐ அப்பல்லோ ,மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கனிமொழி கணவர்
தூத்துக்குடி மக்களவை உறுப்பினரும் திமுகவின் துணைப்பொதுச்செயலாளருமான கனிமொழியின் கணவர் அரவிந்தன் சிங்கப்பூரில் வசித்து வரும் நிலையில் கடந்த சில நாட்களுகு முன்பு இவருக்கு நுரையீரலில் தொற்று ஏற்பட்டது இது குறித்து தகவலறிந்த கனிமொழி சிங்ஜபூருக்கு சென்று தனது கணவரை கவனித்து வந்தார்.
அப்பல்லோவில் அனுமதி
இந்த நிலையில் தமிழ்நாட்டில் தொடர்ந்து சிகிச்சை பெறுவதற்காக சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் நேற்று சென்னை அழைத்து வரப்பட்டார். சென்னை ஆயிரம் விளக்கிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் பரிசோதனைகள் மேற்கொண்டு, சிகிச்சை அளித்து வருகின்றனர்.
அரவிந்தனின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருவதால், வேகமாக குணமடைந்துவிடுவார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.