உடனடியாக குழந்தை பெற்றுக்கொள்ளுங்கள்.. முதல்வர் சொல்லக்கூடிய கருத்து அல்ல - கனிமொழி!
திருமணத்திற்குப்பின் உடனடியாக குழந்தைப் பெற்றுக் கொள்ளலாம் என முதலமைச்சர் கூறியது குறித்து கனிமொழி பதிலளித்துள்ளார்.
முதலமைச்சர்
நாகப்பட்டினம் மவாட்டடத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்பெல்லாம் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள அவசரம் வேண்டாம் எனச் சொல்லி வந்தோம். இப்போது அப்படிச் சொல்ல வேண்டாம். சொல்லவும் கூடாது.
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு நடக்கிறது.மக்கள் தொகை அதிகமாக இருந்தால் தான் எம்பிக்கள் எண்ணிக்கை உயரும் நிலை உள்ளது. நாம் குடும்பக் கட்டுப்பாட்டில் வெற்றி கண்டோம். அதனால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் அவசரப்பட்டுப் பெற்றுக்கொள்ளாதீர்கள் எனச் சொல்ல மாட்டேன்.
உடனடியாக பெற்றுக்கொள்ளுங்கள்.ஆனால் பிறக்கும் குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயரைச் சூட்டுங்கள் என்று கூறியிருந்தார். இது அரசியல் களத்தில் பல்வேறு விவாதத்தை ஏற்படுத்திய நிலையில் கனிமொழி பதில் அளித்துள்ளார்.
கனிமொழி
இந்த நிலையில் தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் ,’’இது தமிழ்நாடு முதலமைச்சர் மட்டும் சொல்லக்கூடிய கருத்து அல்ல என்று கூறினார். இது போன்று ஆந்திர மாநில முதலமைச்சரும் இந்த கருத்தை முன்வைத்துள்ளார்.
தொடர்ந்து பேசியவர் நாட்டு மக்களுக்குகாக பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம் . இதனால் நம்முடைய மக்கள் அதிக அளவில் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக இதனைக் முதலமைச்சர் கூறியதாகக் கூறினார்.
மேலும், பீகார், உத்தரப்பிரதேசத்தில் மக்கள் தொகையை விடத் தமிழ்நாடு குறைவாக கேரளா போன்ற மாநிலங்கள் உள்ளது.ஆனால் பிகார், உ பி, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தேசிய சராசரி விட பல மடங்கு அதிகமாக உள்ளதாகத் தெரிவித்த அவர் தமிழ்நாட்டில் சூழலைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.