தேர்தலுக்கு முன்ஒரு நிலைப்பாடு தேர்தலுக்கு பிறகு ஒரு நிலைப்பாடு: முதல்வரை கிண்டல் செய்த கனிமொழி
திமுக வேட்பாளர் சிவகாமசுந்தரியை ஆதரித்து கனிமொழி இன்று பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிராக கொண்டு வந்த சட்டங்களை ஆதரித்து விவசாயிகளுக்கு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி. விவசாயிகளுக்கு எதிரான சட்டங்கள், குடியுரிமைச் சட்டங்களை பழனிசாமி ஆதரித்துவிட்டு தற்போது அச்சட்டங்களைத் திரும்பப் பெற அழுத்தம் தருவோம் என்கிறார்.
இதையெல்லாம் நம்ப மக்கள் முட்டாள்களா? மக்களை முட்டாளாக நினைத்தவர்கள்தான் முட்டாளாகி இருக்கின்றனர். 3 மாதங்களுக்கு முன் ஒரு நிலைப்பாடு. தேர்தல் வந்தால் ஒரு நிலைப்பாடு.
தமிழகத்தை எந்த அளவுக்கு சீரழிக்க முடியுமோ அந்த அளவுக்கு சீரழித்துவிட்டனர்.
தமிழகத்தை டெல்லியில் அடகு வைத்துவிட்டனர். தமிழகத்தை மீட்டெடுக்கவேண்டும். திமுக ஆட்சியில் தமிழக உரிமைகள் மீட்டெடுக்கப்படும். தமிழக ஆட்சி தமிழகத்திலிருந்து நடத்தப்படும்” என்றார்.