முதல்வர் விஜய்யை ஒருமையில் பேசிய திமுக நிர்வாகி; மேடையிலே கண்டித்த கனிமொழி
kanimozhi condemns dmk councilor for her defamatory speech against cm vijay: முதல்வர் விஜய்யை ஒருமையில் பேசிய திமுக நிர்வாகியை, திமுக துணை பொது செயலாளர் கனிமொழி மேடையிலே கண்டித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
முதல்வர் விஜய்யை ஒருமையில் பேசிய திமுக நிர்வாகி
திமுக துணை பொது செயலாளர் கனிமொழி, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்துகொண்ட திமுக மகளிரணி பொதுக்கூட்டம் சென்னையில் நடைபெற்றது.

அப்போது மேடையில் பேசிய திமுக 95ஆவது வார்டு கவுன்சிலர் சுதா தீனதயாளன் முதல்வர் விஜய் குறித்தும் ஒருமையில் ததாக வார்த்தையிலும் கருத்துக்களை பேசினார்.
திமுக கவுன்சிலரின் இந்த பேச்சுக்கு அமைச்சர் கீர்த்தனா, எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும், தவெக நிர்வாகி அளித்த புகாரின் பேரில், திமுக கவுன்சிலர் சுதா தீனதயாளன் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேடையிலே கண்டித்த கனிமொழி
இந்நிலையில், திமுக துணை பொது செயலாளர் கனிமொழி அந்த நிர்வாகியின் பேச்சை மேடையிலே கண்டித்ததோடு, நாம் முப்பெரும் விழா கொண்டாடும் கட்சி, பெரியார், அண்ணா, கலைஞர் அவர்களின் வழிவந்தவர்கள் என்பதை மனதில் நிறுத்திக்கொண்டு பேச வேண்டும் என தெரிவித்துள்ளார்.

கனிமொழி பேசிய வீடியோவை பகிர்ந்துள்ள திமுக மகளிரணி, "அமைச்சர்கள் கீர்த்தனா, ஜெகதீஸ்வரி, கனிமொழி சந்தோஷ் முதலில் உங்கள் தலைவர் விஜய் அவர்களின் அரசியல் நாகரிகமற்ற செயல்களைக் கண்டிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். அதன் பிறகு அடுத்தவர்களுக்கு அரசியல் நாகரிகத்தைப் பற்றிப் பாடம் எடுக்கலாம்!
அரசியல் முதிர்ச்சி, கண்ணியம், தலைமைப் பண்பு என எதுவாக இருந்தாலும் அக்கா கனிமொழி அவர்களுக்கு முன்னாள் உங்கள் தலைவரால் நிற்க முடியாது!
சைகைகளால் மற்றவர்களை அவமதிக்கும் தலைவரை ஏற்றுக்கொண்டுவிட்டு, அரசியல் நாகரிகத்தைப் பற்றிப் பேசுவதில் என்ன நியாயம் இருக்கிறது?
@Keerthana4VNR @jagadeshwarioff @Kanimozhi_tvk - முதலில் உங்கள் தலைவர் @TVKVijayHQ அவர்களின் அரசியல் நாகரிகமற்ற செயல்களைக் கண்டிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். அதன் பிறகு அடுத்தவர்களுக்கு அரசியல் நாகரிகத்தைப் பற்றிப் பாடம் எடுக்கலாம்! அரசியல் முதிர்ச்சி, கண்ணியம், தலைமைப் பண்பு என எதுவாக இருந்தாலும் அக்கா கனிமொழி அவர்களுக்கு முன்னாள் உங்கள் தலைவரால் நிற்க முடியாது! சைகைகளால் மற்றவர்களை அவமதிக்கும் தலைவரை ஏற்றுக்கொண்டுவிட்டு, அரசியல் நாகரிகத்தைப் பற்றிப் பேசுவதில் என்ன நியாயம் இருக்கிறது? நீங்கள் கட்டமைக்கும் பொய்ப் பிம்பங்களையும், பரப்பும் அவதூறுகளையும் உங்கள் அரசியல் நாடகத்தையும் கதைகளையும் வேறு எங்காவது அரங்கேற்றுங்கள். இங்கே அது எடுபடாது!
— திமுக மகளிர் அணி (@DMKWomensWing) October 19, 2026
நீங்கள் கட்டமைக்கும் பொய்ப் பிம்பங்களையும், பரப்பும் அவதூறுகளையும் உங்கள் அரசியல் நாடகத்தையும் கதைகளையும் வேறு எங்காவது அரங்கேற்றுங்கள். இங்கே அது எடுபடாது!" என பதிவிட்டுள்ளது.