பெண்களை தொடர்ந்து அவதூறாகப் பேசும் தவெகவினர்.., கனிமொழி கண்டனம்

Smt M. K. Kanimozhi DMK TVK
By Yashini Oct 21, 2026 09:08 AM GMT
Report

பெண்களுக்கு எதிராக தவெகவினர் சமூக ஊடகங்கள் வாயிலாக தொடர்ந்து வன்முறையில் ஈடுபடுவதாக திமுக எம்.பி. கனிமொழி குற்றம்சாட்டினார்.

அவர் கூறியதாவது..,

சமூக ஊடகங்களில் மேயர் பிரியா, திமுக மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பெண்கள் குறித்து அவதூறான பதிவுகள் வெளியிடப்படுவதாகக் கூறினார்.

இதுதொடர்பாக பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றார்.

முதல்வருக்கு எதிராக ஏதேனும் நடந்தால் உடனடியாக கைது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

ஆனால், பெண் அமைச்சர் பேசியது, அமைச்சரின் போதைப்பொருள் வீடியோ மற்றும் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்றும் கேள்வி எழுப்பினார்.

பெண்களை தொடர்ந்து அவதூறாகப் பேசும் தவெகவினர்.., கனிமொழி கண்டனம் | Kanimozhi Condemns Defame Women On Social Media  

நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த கார்த்திகா கைது செய்யப்பட்டது பழிவாங்கும் நடவடிக்கை என்று கனிமொழி கூறினார்.

மேலும், நள்ளிரவில் உடை மாற்றக்கூட அனுமதிக்காமல் அவர் கைது செய்யப்பட்டார். இதுதான் பெண்களுக்கு பாதுகாப்பாக இருப்பதா? என்று கேள்வி எழுப்பினார்.

சட்டரீதியாகவும், காவல்துறை மூலமாகவும், சமூக ஊடகங்கள் வாயிலாகவும் பெண்களுக்கு எதிராகத் தொடர்ந்து வன்முறை கட்டவிழ்த்து விடப்படுவதாக அவர் தெரிவித்தார்.