தேநீர் விருந்தில் கனிமொழி எம்பி

Smt M. K. Kanimozhi Narendra Modi
By Fathima Aug 13, 2026 09:35 AM GMT
Report

Kanimozhi at Lok Sabha Speakers Tea Party: மக்களவை தலைவர் ஓம் பிர்லாவின் தேநீர் விருந்தில் திமுக எம்பி கனிமொழி கலந்து கொண்டுள்ளது விவாதத்தை கிளப்பியுள்ளது.

நாடாளுமன்ற மக்களவை கூட்டத்தொடர் கடந்த மாதம் 20ம் தேதி தொடங்கிய நிலையில் இரு அவைகளிலும் இன்றுடன் நிறைவடைந்தது.

இதனை தொடர்ந்து அனைத்து கட்சி எம்பி-களுக்கும் வழக்கம் போல் அவைத்தலைவர் ஓம் பிர்லா தேநீர் விருந்து அளித்தார். இதனை காங்கிரஸ் உட்பட இந்தியா கூட்டணி எம்பிக்கள் புறக்கணித்த நிலையில், திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி எம்பி கலந்து கொண்டார்.

ஏற்கனவே பாஜக-வுடன் திமுக கூட்டணி அமையும் என தமிழகத்தில் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் இச்செயல் விவாதத்தை மேலும் அதிகரித்துள்ளது.

தேநீர் விருந்தில் கனிமொழி எம்பி | Kanimozhi At The Lok Sabha Speakers Tea Party