"மன்னிப்பு கேட்க மாட்டேன்" - கனிமொழிக்கு அண்ணாமலை பதில்
சொத்து பட்டியல் விவகாரத்தில், கனிமொழி அனுப்பிய நோடீஸுக்கு அண்ணாமலை கூறிய பதில்.
பாஜக வெளியிட்ட பட்டியல்
சென்னையில், கடந்த ஏப்ரல் 14ம் தேதி செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, திமுகவினர் மற்றும் அமைச்சர்களின் சொத்துப் பட்டியலை வெளியிட்டார். அதில், ஒவ்வொருவருக்கும் எவ்வளவு சொத்துகள் உள்ளன என வீடியோவையும் வெளியிட்டார்.
இந்த விவகாரம் குறித்து திமுக எம்.பி. கனிமொழி நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அதில், அடிப்படை ஆதாரம் இன்றி அவதூறு பரப்பும் வகையில் வீடியோ வெளியிட்ட அண்ணாமலை ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்கவேண்டும் எனவும், உடனடியாக 48 மணிநேரத்தில் விடியோவை நீக்கவேண்டும் எனவும் தனது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
அண்ணாமலை பதில்
இதனை தொடர்ந்து, பாஜக தலைவரான அண்ணாமலை, கனிமொழியின் சொத்து விவரங்களை வெளியிட்ட விவகாரத்தில் மன்னிப்பு கேட்க மாட்டேன் என கூறியுள்ளார்.
மேலும், சட்ட நடவடிக்கையின் மூலம் தனது குரலை ஒருபோதும் ஒடுக்க முடியாது எனவும் கூறியுள்ளார்.