முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி கூறிய கனிமொழி - எதற்கு தெரியுமா?
சுற்றுச் சூழலை மேம்படுத்த குழு அமைக்கப்படும், புதிய தகவல் தொழில்நுட்ப பூங்கா உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்ட தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் திமுக எம்.பி.கனிமொழி நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தொழில்துறை அலகுகளுக்காக 60MLT கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், அறைகலன்கள் சர்வதேச பூங்கா, புதிய தகவல் தொழில்நுட்ப பூங்கா ஆகிய திட்டங்களை தூத்துக்குடி மக்களின் நலனுக்காக அறிவித்த தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு தூத்துக்குடி மக்களின் சார்பாக என்னுடைய மனமார்ந்த நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.
தொழில்துறை அலகுகளுக்காக 60MLT கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், அறைகலன்கள் சர்வதேச பூங்கா, புதிய தகவல் தொழில்நுட்ப பூங்கா ஆகிய திட்டங்களை தூத்துக்குடி மக்களின் நலனுக்காக அறிவித்த தமிழ்நாடு முதல்வர் திரு@mkstalin அவர்களுக்கு தூத்துக்குடி மக்களின் சார்பாக என்னுடைய மனமார்ந்த நன்றி!
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) August 13, 2021
மற்றொரு பதிவில், தமிழ்நாட்டின் சுற்றுச் சூழலை மேம்படுத்த ரூ.500 கோடி செலவில் பருவநிலை மாற்ற சவால்களை எதிர்கொள்ள இயக்கம் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பு முக்கியமானது.
வளர்ச்சியோடு சூழலியல் பாதுகாப்பையும் கவனத்தில் கொண்டு ஆட்சி நடத்தும் முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி. #TNBudget என்று குறிப்பிட்டுள்ளார். முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின் பட்ஜெட் அரசியல் தலைவர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.