காங்கேயத்தில் திமுகவுக்கு பின்னடைவு - தவெகவில் இணைந்த நகராட்சித் தலைவர்!

Tamil nadu DMK TVK
By Vinoja Nov 22, 2026 10:53 AM GMT
Report

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நகராட்சித் தலைவர் சூர்யபிரகாஷ், திமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ளார். அவரது இந்த முடிவு திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியையும், காங்கேயம் மற்றும் திருப்பூர் மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், காங்கேயம் நகராட்சியில் உள்ள 18 வார்டுகளில் திமுக 10, அதிமுக 4, காங்கிரஸ் 1, சுயேச்சைகள் 3 இடங்களில் வெற்றி பெற்றனர்.

காங்கேயத்தில் திமுகவுக்கு பின்னடைவு - தவெகவில் இணைந்த நகராட்சித் தலைவர்! | Kangeyam Municipality Chairman Joins Tvk

பதவி விலக மறுத்ததால் கட்சியிலிருந்து நீக்கம்

நகராட்சித் தலைவர் பதவியை கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு திமுக ஒதுக்கியிருந்தது. ஆனால், தலைவர் பதவிக்கான தேர்தலில் திமுக கவுன்சிலரான சூர்யபிரகாஷ் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இதனால் திமுக கூட்டணிக்குள் பெரும் அதிருப்தி ஏற்பட்டது. கூட்டணி தர்மத்தைக் காக்கும் வகையில் பதவி விலகுமாறு அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இருப்பினும், சூர்யபிரகாஷ் பதவி விலக மறுத்ததால் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். இதன்பிறகு கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வந்த சூர்யபிரகாஷ், தற்போது திமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்துள்ளார்.

தமிழகத்தில் தவெக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள நிலையில், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அக்கட்சியில் இணைந்து வரும் சூழலில், காங்கேயம் நகராட்சித் தலைவரின் இந்த இணைவு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.