நடிகரை காதல் என்ற பெயரில் உடல் ரீதியாக துன்புறுத்திய நடிகை கங்கனா ரனாவத்..!
பிரபல இந்தி பட நடிகை கங்கனா ரனாவத் 2008-ஆம் ஆண்டு மற்றொரு பாலிவுட் நடிகர் அத்யாயன் சுமன் என்பவருடன் காதலில் இருந்து வந்தார்.
பிரபல நடிகருடன் காதல்
இருப்பினும் அடுத்த ஆண்டே இந்த ஜோடி பிரிந்தனர். Raaz : the Mystery continous என்ற படத்தில் என்ற படத்தில் இருவரும் ஒன்றாக நடித்தபோது காதல் ஏற்பட்டது.
இருவரும் பிரிந்து கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் கழித்து தனியார் பேட்டி ஒன்றில், தங்களது காதல் முறிவிற்கான காரணத்தை அத்யாயன் சுமன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசும் போது, ஏற்கனவே கங்கனா இது குறித்து வெளியில் பேசியுள்ள நிலையில், இருதரப்பின் குறித்தும் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
தான் இது குறித்து வெளியில் பேசி, தன் மீது அனுதாபம் ஏற்படுத்திக்கொள்ள விரும்பவிலை என தெரிவித்த அவர், அதன் காரணமாகவே இது பற்றி பொதுவில் தான் பேசவில்லை என சுட்டிக்காட்டினார்.
உடல் ரீதியாக துன்புறுத்தல்
நாணயத்திற்கு இரு பக்கங்கள் உள்ளது என கூறி, தான் தங்களது உருவை பற்றி வெளியில் பேசுவதற்கு வருத்தப்படவில்லை என்றும் கூறினார்.
முன்னதாக 2016-ஆம் ஆண்டு இது குறித்து பேசியிருந்த அத்யாயன் சுமன், காதலில் இருந்த போது, கங்கனா தன் மீது black magic போன்றவற்றை செய்ததாகவும், உடல் ரீதியாக தன்னை துன்புறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.
தற்போது மீண்டும் கங்கனா குறித்து அத்யாயன் சுமன், பொதுவில் பேசியுள்ளது பாலிவுட் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.