வேலையும் இல்லை..வருமான வரியும் கொடுக்கல: புலம்பும் பிரபல நடிகை
பணி இல்லாத காரணத்தால் கடந்த வருட வருமானவரியின் பாதித்தொகையை செலுத்த முடியவில்லை என நடிகை கங்கனா ரனாவத் கூறியுள்ளார்.
தமிழில் தாம் தூம், தலைவி ஆகிய படங்களில் நடித்துள்ள கங்கனா பாலிவுட்டில் முன்னணி நடிகையாக உள்ளார்.
அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், தான் அதிகமாக வரிமான வரி செலுத்துபவராக இருப்பதாகவும், கிட்டத்தட்ட தனது வருமானத்தின் 45% வருமான வரியாக செலுத்துகிறேன் எனவும் கூறியுள்ளார்.
ஆனால் வாழ்வில் முதன் முறையாக கடந்த ஆண்டு வேலை ஏதும் இல்லாத காரணத்தால் வருமான வரியின் பாதித் தொகையை செலுத்த முடியவில்லை. நான் தாமதமாக வருமான வரித்தொகையை செலுத்தி்யதால் அரசு மீதமுள்ள பணத்திற்கு வட்டியை விதித்துள்ளது. நான் இதனை வரவேற்கிறேன் என கங்கனா தெரிவித்துள்ளார்.