இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்ற வேண்டும் - சர்ச்சை நாயகி கங்கனா அதிரடி கருத்து!
இந்தியாவின் பெயரை பாரத் என்று மாற்ற வேண்டும் என பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் அடிக்கடி பொதுமக்கள் மத்தியில் சர்ச்சையில் சிக்கி வருவது வழக்கம்.
சமூக வலைதளங்களில் அவர் தெரிவிக்கும் கருத்துக்களால் அடிக்கடி சர்ச்சையில் சிக்கி கொள்வார். இந்த நிலையில் தற்போது புதிய சர்ச்சை ஒன்றை கிளப்பியுள்ளார்.

இது குறித்து அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியது, ஆங்கிலேயர் கொடுத்த அடிமை பெயர் தான் இந்தியா என்றும், சிந்து ஆற்றின் கிழக்கு என்பது அதன் அர்த்தம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பாரத் என்ற சொல் மூன்று சமஸ்கிருத வார்த்தைகளால் உருவானது என்றும், நாம் அடிமைப்படுத்தப்படுவதற்கு முன்பு அப்படித்தான் இருந்தோம் எனவும் கூறியுள்ளார்.

எனவே இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்ற வேண்டும் எனவும் நாம் இழந்த பெருமையை மீண்டும் பெற வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இந்த கருத்துக்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பி வந்தாலும், சிலர் அவரை ஆதரித்து வருகின்றனர்.