விவாகரத்து முன்பே கர்ப்பம்ஆயிட்டேன், கண்கலங்கிய கங்கனா : சர்ச்சையினை கிளப்பிய டிவி நிகழ்ச்சி
நடிகை கங்கனா ரனாவத் தொகுத்து வழங்கி வரும் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி வருகிறது. பிரபல ஒடிடி தளத்தில் வெளியாகியுள்ள லாக் அப் நிகழ்ச்சி பல்வேறு தரப்பட்ட விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ள இந்த நிகழ்ச்சி 72 நாட்கள் ஒளிபரப்பாக உள்ளது. இதில் அமெரிக்க சிறை போன்ற அமைப்பில் உள்ள அறையில் போட்டியாளர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்கள் பகிர்ந்து வரும் ரகசியங்கள் பாலிவுட் திரையுலகில் சர்ச்சையினையும் பரபரப்பையும் கிளப்பிவருகிறது.
இந்த நிகழ்ச்சியில் பிரபல நடிகையான மந்தனா கரிமி, தொழில் அதிபர் ஒருவரை திருமணம் செய்த பிறகு இயக்குநர் ஒருவருடன் தொடர்பு இருந்ததாக கூறியுள்ளார்.
மேலும், தனது கணவருடன் விவாகரத்து பெறுவதற்கு முன்பே இயக்குநரால் கர்ப்பமானதாக திடுக்கிடும் தகவலை தெரிவித்த அவர் தனது கணவரையும் குழந்தையையும் இழந்து வாழ்க்கையினையே தொலைத்தாக கூறினார்.
இதனை கேட்ட கங்கனா ரனாவத் கண்ணீர்விட்டார்.
இந்த நிகழ்ச்சி பல சர்ச்சைகளை கிளப்பினாலிம் ஓடிடி நிகழ்ச்சிகளில் டாப்பில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.