எங்க போனாலும் ஃபாலோ பண்றாங்க : கங்கனா ரனாவத் பகீர் குற்றச்சாட்டு
கங்கனா ரனாவத் பாலிவுட் பிரபல தம்பதி தன்னை உளவு பார்ப்பதாக தனது இன்ஸ்டா ஸ்டோரி மூலம் குற்றம்சாட்டியுள்ளார்.
கங்கனா சர்ச்சை
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் கங்கனா ரனாவத் சர்ச்சைகளை கிளப்புவதில் பிரபலமானவர் இந்த நிலையில் தன்னை ஒரு பிரபல தம்பதி உளவு பார்க்கிறார்கள் என்பது தான். பார்க்கிங் ஏரியா, பொது இடம், தெரு, பால்கனி என எங்கு சென்றாலும் அவரை உளவு பார்ப்பதாகவும் ஜூம் லென்ஸ் பயன்படுத்தி எந்நேரமும் அவர் செய்யும் விஷயங்களை நோட்டமிடுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து தனது இன்ஸ்டகிராம் பதிவில் நேற்று இரவு முதல் சந்தேகப்படும்படியான நடவடிக்கைகள் எதுவும் நடைபெறவில்லை என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
எச்சரிக்கும் கங்கனா
கேமராவோடு அல்லது கேமரா இல்லாமல் யாரும் பின்தொடரவில்லை. வார்த்தைகள் மூலம் புரியவைக்க முடியவில்லை என்றால் வேறு வழியில் தான் புரிய வைக்க வேண்டும். உங்களை திருத்தி கொள்ள எச்சரிக்கிறேன். இல்லையேல் உங்கள் வீட்டிற்குள் நுழைந்து தாக்க கூட தயங்க மாட்டேன். என்னை பைத்தியம் என அழைத்தாலும் கூட கவலையில்லை. நான் எந்த அளவிற்கு செல்வேன் என்பது எனக்கே தெரியாது' என மிகவும் கடுமையாக இன்ஸ்டா ஸ்டோரி மூலம் எச்சரித்து ஒரு வாள் இமோஜியையும் பயன்படுத்தி இருந்தார் நடிகை கங்கனா ரனாவத்.
Kangana Ranaut through her Facebook handel exposing those Bollywood mafia. #KanganaRanaut pic.twitter.com/qBnssFc67H
— Kangana Ranaut (@TeamKanganaaa) February 5, 2023
இந்த தகவல் சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது
கங்கனா யாரை பற்றி இப்படி குற்றம் சாட்டுகிறார் என்பதை வெளிப்படையாக கோரவில்லை என்றாலும் நெட்டிசன்கள் யுகங்களின் படி அது ரன்பீர் கபூர் - ஆலியா பட்டாக இருக்குமோ என சந்தேகத்தை எழுப்பியுள்ளனர்

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.