மாப்பிள்ளை கிடைக்காமல் தவிக்கும் பிரபல நடிகை... ரசிகர்கள் அதிர்ச்சி
தனக்கு மாப்பிள்ளை கிடைப்பதில் சிரமம் ஏற்படுவதாக பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் கிண்டலாக கூறியுள்ளார்.
ரங்கூன், குயின்,தாம் தூம், தலைவி, உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை கங்கனா ரனாவத். எந்தளவு புகழில் இருக்கிறாரோ அதே அளவுக்கு சர்ச்சையிலும் சிக்குவது இவர் வழக்கம். சினிமாவை தாண்டி அரசியல் கருத்துகளையும் இவர் துணிச்சலாக முன்வைத்து வருகிறார்.
சமீபத்தில் கூட இந்தி மொழி சர்ச்சை ஏற்பட்ட போது சமஸ்கிருதம் குறித்து தனது கருத்தை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். குறிப்பாக மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா கட்சிக்கு எதிராக அவர் பல்வேறு கருத்துகளை கூறி வருவதால் ஆளும் கட்சியினருக்கும், இவருக்குமிடையே மோதல் நிலவி வருகிறது.
இந்நிலையில் கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகியுள்ள 'தாக்காட்' என்ற திரைப்படம் வரும் மே 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தில் உளவாளி கதாபாத்திரத்தில் கங்கனா நடித்திருக்கிறார். இந்தி சினிமாவில் கதாநாயகி ஒருவர் உளவாளியாக நடித்திருப்பது இதுவே முதல்முறை என்பதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று இந்த திரைப்படத்தின் 'ப்ரோமோ' நிகழ்ச்சி தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்றது. அப்போது தொகுப்பாளர் கங்கனாவை பார்த்து, "தாக்காட் படத்தில் வருவதை போல நீங்கள் நிஜ வாழ்க்கையிலும் 'டாம்பாய்' ரக பெண் தானா? என கேள்வியெழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அவர் என்னை பலரும் அப்படிதான் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். தவறு செய்யும் ஆண்களை தட்டி கேட்கும் பெண் என நினைக்கின்றனர். ஆனால் நான் உண்மையில் அப்படி இல்லை. நான் நிஜ வாழ்க்கையில் மிகவும் அமைதியான பெண்.இதுவரை யாரையும் நான் அடித்தது கூட கிடையாது. உங்களை போன்ற ஆட்கள் பரப்பி வரும் வதந்திகளால் தான் எனக்கு திருமணத்துக்கு மாப்பிள்ளை கிடைப்பது கூட மிகவும் சிரமமாக இருக்கிறது என கிண்டலாக கூறினார்.

நீங்க நினைக்கிற மாதிரியான பொண்ணு நான் இல்லை... ரிலேஷன்ஷிப் குறித்து மனம் திறந்து பேசிய கயாடு லோஹர்! Manithan
