கங்கணாவை பா.ஜ.க-வில் வரவேற்கிறோம் ஆனால் ? ஜேபி நட்டா வைத்த ட்விஸ்ட்

BJP Kangana Ranaut
By Irumporai Oct 30, 2022 11:55 AM GMT
Report

பிரபல பாலிவுட் நடிகர் கங்கணா ராவத் பாஜகவில் இணைவது வரவேற்கத்தக்கது என பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தெரிவித்துள்ளார்.

கங்கனா

இந்த நிலையில் கங்கனா கருத்து குறித்து பாஜக தேசிய தலைவர் நட்டாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இமாச்சல் தேர்தல் பரப்புரைக்காக சிம்லா வந்துள்ள ஜேபி நட்டா விடம் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசினார்.

அப்போது கங்கணா ரனாவத் குறித்து பேசிய ஜேபி நட்டா பாஜகவில் கங்கணா சேருவது வரவேற்கத்தக்கது. கட்சியுடன் இணைந்து பணியாற்ற விரும்பும் அனைவருக்கும் பாஜக இடம் உண்டு. ஆனால் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குவது எனது தனி முடிவு அல்ல.

கங்கணாவை பா.ஜ.க-வில் வரவேற்கிறோம் ஆனால் ? ஜேபி நட்டா வைத்த ட்விஸ்ட் | Kangana Ranaut Is Welcome To Join Bjp

ஜேபி நட்டா கருத்து

கட்சியில் உள்ள சிறிய  தொண்டர்கள் முதல் தேர்தல் கமிட்டி, நாடாளுமன்ற குழு வரை அனைவரிடமும் ஆலோசனை செய்யப்படும். பாஜகவில் இணையும் அனைவரையும் நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் அவர்களின் வலிமை என்ன என்பதை கட்சிதான் முடிவு செய்யும் எனக் கூறினார்.

ஆக நட்டாவின் இந்த கருத்தின் மூலமாக கங்கணா ரனவாத்தினை பாஜக இணைய வரவேற்கிறது , அதே சமயம் வரும் தேர்தலில் கங்கணாவை வேட்பாளராக முன்னிறுத்துமா ? என்பதுதான் இங்கு அர்சியல் விமர்சகர்களின் கேள்வியாக உள்ளது, எப்போதும் திரை பிரபலங்களை நட்சத்திர வேட்பாளராக களம்மிறக்குமா ? அதற்கான பதிலை காலம் தான் கூற வேண்டும்