மன்னிப்பு கேட்காவிட்டால் சூட்டிங்கை நிறுத்தி விடுவோம்- கங்கனாவுக்கு மிரட்டல் விடுத்த காங்கிரசார்

flim politician bomb
By Jon Feb 12, 2021 02:51 PM GMT
Report

விவசாயிகள் குறித்து சர்ச்சைக்குரிய டிவிட் செய்ததால் நடிகை கங்கனா ரானாவத் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இல்லையென்றால் அவரது படப்பிடிப்பை நிறுத்தி விடுவோம் என்று மத்திய பிரதேச காங்கிரசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் அண்மையில் டிவிட்டரில், டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை தீவிரவாதிகள் என்று சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து இருந்ததாக தெரிகிறது. மேலும் அந்த டிவிட்டை டிவிட்டர் நிறுவனம் நீக்கியது.

தற்போது, மத்திய பிரதேசத்தில் பெத்துல மாவட்டத்தின் சர்னி பகுதியில் நடைபெறும் படப்பிடிப்பில் கங்கனா இருக்கிறார். இச்சூழ்நிலையில், அந்த சர்ச்சைக்குரிய டிவிட்டுக்காக கங்கனா மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையென்றால் அவரது படப்பிடிப்பை நிறுத்தி விடுவோம் என்று அம்மாநில காங்கிரசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் சகோதரி-மகள் கங்கனா படப்பிடிப்பின் போது எந்த பிரச்சினையும் எதிர்க்கொள்ள மாட்டார் என்று அம்மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா உறுதி அளித்திருக்கிறார்.  

மன்னிப்பு கேட்காவிட்டால் சூட்டிங்கை நிறுத்தி விடுவோம்- கங்கனாவுக்கு மிரட்டல் விடுத்த காங்கிரசார் | Kangana Ranaut Congress Shooting

நரோட்டம் மிஸ்ரா இது தொடர்பாக தெரிவிக்கையில், மாநில காங்கிரஸ் தலைவர் கமல் நாத் தனது கட்சி தொண்டர்கள் படப்பிடிப்புக்கு இடையூறு விளைவிப்பதைக் தடுக்க வேண்டும். நான் பெத்துல் காவல்துறை கண்காணிப்பாளருடன் தொலைப்பேசியில் பேசி இருக்கிறேன். சட்டம் தனது சொந்த நடவடிக்கை மேற்கொள்ளும். நான் சகோதரி-மகள் கங்கனாவை தொடர்புகொள்ள முயற்சி செய்கிறேன். அவள் (கங்கனா) எந்த பிரச்சினையும் எதிர்கொள்ள மாட்டாள் என்று தெரிவித்திருக்கிறார்.