பாலிவுட் நடிகர்களின் பிள்ளைகள் அவித்த முட்டைகளைப்போல இருக்காங்க : மீண்டும் சர்ச்சையினை கிளப்பும் கங்கனா
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகை கங்கனா ரனாவத்(Kangana Ranaut) எந்த விஷயமாக இருந்தாலும் சரி, தன் கருத்துக்களை எந்தவித தயக்கமுமின்றி முன்வைப்பவர்.
அதே சமயம் தனதுசர்ச்சையான பதில்களால் கங்கனாவின் கேள்விகள் இணையத்தில் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகும் இந்த நிலையில் பாலிவுட்சினிமா வெற்றியடைய காரணம் என்ன என்ற கேள்வியை ஒரு பிரபல ஊடக நிகழ்ச்சியில் கேட்கபட்டது.
அதற்கு பதிலளித்த கங்கனா :
இங்கு பார்வையாளர்களுடன்ரசிகர்களுடன் இளம் பாலிவுட் நட்சத்திரங்கள் பெரிதாக தொடர்படுத்திக்கொள்ளும் அளவுக்கு அவர்கள் நடிப்பு இல்லை என்று கங்கனா ரனாவத் கூறியுள்ளார்.
மேலும், தென்னிந்திய நடிகர்களுக்கும் ரசிர்களுக்கும் இடையே எப்போதும் தொடர்பு இருக்கிறது. அது ரசிகர்கள் என்பதையும் தாண்டிய ஓர் பந்தம். இந்தி சினிமா துறையை பொறுத்தவரை, பிரபலங்களின் மகன்கள் வெளிநாடுகளுக்குப் படிக்க சென்றுவிடுகிறார்கள்.
அவர்கள் ஆங்கிலம் மட்டுமே பேசுகிறார்கள்; ஹாலிவுட் படங்கள் மட்டுமே பார்க்கிறார்கள். அவர்கள் கத்தி மற்றும் நைஃப் வைத்துதான் சாப்பாடு சாப்பிடுகிறார்கள். அவர்களின் பேச்சு வித்தியாசமாக இருக்கிறது.
இப்படி இருப்பவர்களால், ஹிந்தி மக்கள், ரசிகர்களுடன் எப்படி தொடர்படுத்திக்கொள்ள முடியும்? இங்கிருக்கும் மக்களுக்கு இப்படிப்பட்ட நட்சத்திரங்களுடம் எப்படி தங்களுடன் இணைத்து தொடர்புபடுத்திக்கொள்ள முடியும்?
பாலிவுட் வாரிசுகள் வேக வைத்த முட்டைகள் (boiled eggs) போல இருக்கிறார்கள்; நான் யாரையும் உள்நோக்கத்தோடு கூறவில்லை என்று கூறி வழக்கம் போல் மீண்டும் சர்ச்சையினை கிளப்பியுள்ளார் கங்கனா