இதுபோன்ற வதந்திகளால் தான் எனக்கு இதுவரை திருமணம் நடக்கவில்லை - நடிகை கங்கனா ரனாவத்
ஆண்களை அடிப்பேன் என்று பரவும் வதந்தியால் தான் தனக்கு இதுவரை திருமணம் நடக்கவில்லை என்று நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வரும் கங்கனா ரனாவத் தொகுத்து வழங்கி வந்த லாக் அப் என்ற நிகழ்ச்சி அண்மையில் நிரைவு பெற்றது.
இதனை தொடர்ந்து அவர் மீண்டும் படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். கங்கனா ரனாவத் நடிப்பில் கடைசியாக வெளிவந்த தலைவி படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்த படத்தை தொடர்ந்து ஆக்ஷன் நாயகியாக கங்கனா நடித்துள்ள தாகத் படம் வருகிற 20-ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் தாகத் படம் குறித்து கங்கனா பேசிய போது, படத்தை போன்று நிஜத்திலும் நடந்துக்கொள்வீர்களா என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர், நிஜத்தில் யாரை என்னால் அடிக்க முடியும், "இதுபோன்ற வதந்திகளால் தான் தனக்கு திருமணம் ஆகவில்லை" என சிரித்தப்படி பதிலளித்தார்.