வெறும் 20 டிக்கெட் மட்டுமே விற்பனையான கங்கனா படம் - தயாரிப்பாளர்கள் வருத்தம்
பாலிவுட்டில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நடிகை கங்கனா ரனாவத். இவர் தொகுத்து வழங்கி வந்த ‘லாக் அப்’ நிகழ்ச்சி அண்மையில் நிறைவடைந்தது.
இதனையடுத்து, மீண்டும் படங்களில் தன்னுடைய கவனம் செலுத்தி வருகிறார். கங்கனா ரனாவத் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘தலைவி’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்தப் படத்தை தொடர்ந்து ஆக்ஷன் நாயகியாக கங்கனா நடித்துள்ள ‘தாகத்’ படம் கடந்த 20-ம் தேதி வெளியானது.
இப்படம் இந்தியா முழுவதும் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், வெளியான 8வது நாளில் 20 டிக்கெட் மட்டுமே விற்பனை ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மே 20ம் தேதி வெளியன இந்த திரைப்படம் மொத்தமே ரூ.3 கோடி மட்டுமே வசூல் செய்திருப்பதாக தயாரிப்பாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.