சர்ச்சையை கிளப்பிய கேன் வில்லியம்சன் விக்கெட் - தலைகீழாக மாற்றிய ஆட்டம்

IPL2022 kanewilliamson TATAIPL2022
By Petchi Avudaiappan Mar 30, 2022 08:13 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் கோலாகலமால தொடங்கியுள்ள நிலையில் வழக்கம்போல சர்ச்சைகளும் ஆரம்பித்துள்ளன. 

நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 26 ஆம் தேதி மும்பையில் கோலாகலமாக தொடங்கியது. இந்த தொடரில் இதுவரை 5 போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளது. இதில் நேற்று நடந்த போட்டியில் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் குவித்தது. 

தொடர்ந்து பேட்  செய்த ஹைதராபாத்  அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் 61 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அபார வெற்றி பெற்றது. இதனிடையே இந்த போட்டியில் ஹைதராபாத் அணி  தொடக்க வீரர்கள் கேப்டன் கேன் வில்லியம்சன் 2 ரன்களுக்கும், அபிசேஷ் சர்மா 9 ரன்களுக்கும் அவுட்டாக பின்னால் வந்த ராகுல் திரிபாதி மற்றும் நிக்கோலஸ் பூரண் இருவருமே டக் அவுட்டாகி வெளியேறினர். 

இதில் கேன் வில்லியம்சன் விக்கெட் பெரும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. ஆட்டத்தின் 2வது ஓவரில் பிரஷித் கிருஷ்ணா வீசிய பந்தை வில்லியம்சன் தடுப்பாட்டம் ஆட முயல அது பேட்டில் எட்ஜாகி விக்கெட் கீப்பரிடம் சென்றது. கீப்பிங்கில் நின்றிருந்த ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் டைவ் அடித்து ஒற்றை கையால் பந்தை பிடித்தார். ஆனால் விழுந்த வேகத்தில் பந்து கை நழுவியது.

இதனை லாவகமாக ஸ்லிப் ஃபீல்டிங்கில் நின்றுக்கொண்டிருந்த தேவ்தத் பட்டிக்கல் டைவ் அடித்து பிடித்தார்.  பந்து தரையில் பட்டதுபோல இருந்ததால் அது உண்மையில் அவுட் தானா என்ற கேள்வி எழுந்தது. தீவிர பரிசோதனைக்குப் பிறகே வில்லியம்சனுக்கு 3வது நடுவர் அவுட் கொடுப்பதாக அறிவித்தார். இது ஹைதராபாத் அணி உரிமையாளர் காவ்யா மாறன் உள்ளிட்ட பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் ஹைதராபாத் அணி  தோல்வியை தழுவியதாக ரசிகர்கள் கருத்து  தெரிவித்துள்ளனர்.