டி20 உலக கிரிக்கெட் தொடர் - கேப்டன் கேன் வில்லியம்சன் திடீர் விலகல் - ரசிகர்கள் அதிர்ச்சி...!

Cricket New Zealand Cricket Team Kane Williamson
By Nandhini Nov 21, 2022 05:58 AM GMT
Report

இந்திய அணிக்கு எதிரான 3-வது டி20 போட்டியிலிருந்து கேப்டன் கேன் வில்லியம்சன் விலகியுள்ளதால் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

டி20 உலக கிரிக்கெட் தொடர் -

ஆஸ்திரேலியாவில் நடந்த உலக கோப்பை டி20 தொடருக்குப் பின்னர், நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.

நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறும் வீரர்களின் பெயர்கள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்த உலக கோப்பை T20 தொடர் போட்டியில் ஹர்திக் பாண்ட்யாவும், ஒரு நாள் போட்டிக்கு ஷிகர் தவானும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

நியூசிலாந்துக்கு எதிரான இந்திய ஒரு நாள் போட்டியில் ஷிகர் தவான் கேப்டனாகவும், ரிஷப் பண்ட் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நியூசிலாந்தை வீழ்த்திய இந்தியா

டி20 உலக கிரிக்கெட் தொடரில் நேற்று 2வது போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய களத்தில் இறங்கியது. இப்போட்டியின் இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 191ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 192 ரன்கள் இலக்குடன் களத்தில் இறங்கியது. இப்போட்டியின் முடிவில் 18.5 ஓவர்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்து 126 ரன்களுக்கு நியூசிலாந்து அணி ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் அபாசமாக வெற்றி அடைந்தது.

கேப்டன் கேன் வில்லியம்சன் விலகல்

இந்நிலையில், இந்திய அணிக்கு எதிரான 3-வது டி20 போட்டியிலிருந்து கேப்டன் கேன் வில்லியம்சன் மருத்துவ காரணங்களால் விலகியுள்ளார்.

இதனையடுத்து, நியூசிலாந்து அணிக்கு டிம் சௌதி தலைமையேற்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.