கெத்தாக கேட்ச் பிடித்த வில்லியம்சன்..வைரலாகும் வீடியோ
ஐபிஎல் டி.20 தொடரின் நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின.
துபாய் ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணிக்கு விர்திமான் சஹா 44 ரன்கள் எடுத்து கொடுத்தாலும், மற்ற வீரர்கள் பெரிதாக ரன் குவிக்க தவறியதால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 134 ரன்கள் எடுத்தது.
135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற ஈசியான இலக்கை துரத்தி களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, ருத்துராஜ் கெய்க்வாட் (45) மற்றும் டூபிளசிஸ் (41) ஆகியோர் மிக சிறப்பான துவக்கம் கொடுத்தனர்.
வெற்றிக்கு தேவையான 70 சதவீத ரன்களை துவக்க வீரர்களே எடுத்து கொடுத்த போதிலும், திடீரென சென்னை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால், சென்னை அணியின் வெற்றிக்கு கடைசி ஒரு ஓவரில் 3 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.
கடைசி ஓவரில் சென்னை ரசிகர்களே வெறுப்பாகும் அளவிற்கு இரண்டு பந்துகளை வீணடித்த தோனி, கடைசி ஓவரின் 4 பந்தில் தனது ஸ்டைலில் சிக்ஸர் அடித்து சென்னை அணிக்கு வெற்றியை பெற்று கொடுத்துள்ளார்.
இந்நிலையில் கெயிக்குவாட் அடித்த பந்தை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் அசல்டாக கேட்ச் பிடிக்கும் விடியோ தற்போது நெட்டிசன்கள் மத்தியில் பகிரப்பட்டு வருகிறது