இந்திய தொடரில் இருந்து விலகினார் கேன் வில்லியம்சன் - ரசிகர்கள் அதிர்ச்சி

INDvNZ kanewilliamson
By Petchi Avudaiappan Nov 16, 2021 05:46 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

இந்திய அணிக்கு எதிரான டி20 போட்டிகளில் இருந்து நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் விலகியுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது. இதில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

இந்திய தொடரில் இருந்து விலகினார் கேன் வில்லியம்சன் - ரசிகர்கள் அதிர்ச்சி | Kane Williamson Quits From India T20 Tournament

இதனைத் தொடர்ந்து  இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள நியூசிலாந்து அணி மூன்று டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் முதல் டி20 போட்டி நாளை ஜெய்ப்பூரில் நடைபெறவுள்ளது. 

இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான டி20 போட்டிகளில் இருந்து நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் விலகுவதாக அறிவித்துள்ளார்.கான்பூரில் நவம்பர் 25 ஆம் தேதி தொடங்கும் டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வகையில், இந்தியாவுக்கு எதிரான மூன்று ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் இருந்து விலகுவதாக கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.

இதன்படி நாளை தொடங்கும் டி20 தொடரின் தொடக்க ஆட்டத்தில் டிம் சவுதி கேப்டனாக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.