கேப்டன் பொறுப்பிலிருந்து கேன் வில்லியம்சன் விலகல்... - ஷாக்கான ரசிகர்கள்...!

New Zealand Cricket Team Kane Williamson
By Nandhini Dec 15, 2022 07:25 AM GMT
Report

நியூசிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து கேன் வில்லியம்சன் விலகியுள்ளதால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

டி20 உலக கிரிக்கெட் தொடர் -

ஆஸ்திரேலியாவில் நடந்த உலக கோப்பை டி20 தொடருக்குப் பின்னர், நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடியது.

இந்த உலக கோப்பை T20 தொடர் போட்டியில் ஹர்திக் பாண்ட்யாவும், ஒரு நாள் போட்டிக்கு ஷிகர் தவானும் கேப்டனாக நியமிக்கப்பட்டனர். மேலும், நியூசிலாந்துக்கு எதிரான இந்திய ஒரு நாள் போட்டியில் ஷிகர் தவான் கேப்டனாகவும், ரிஷப் பண்ட் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கேன் வில்லியம்சன் விலகல்

சமீபத்தில், இந்திய அணிக்கு எதிரான 3-வது டி20 போட்டியிலிருந்து கேப்டன் கேன் வில்லியம்சன் மருத்துவ காரணங்களால் விலகினார். இதனையடுத்து, நியூசிலாந்து அணிக்கு டிம் சௌதி தலைமையேற்றார்.

kane-williamson-cricket-new-zealand-deviation

கேப்டன் பதவியிலிருந்து வில்லியம்சன் விலகல்

இந்நிலியல், நியூசிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து கேன் வில்லியம்சன் விலகியுள்ளார். இந்த மாதம் பாகிஸ்தானுக்கான டெஸ்ட் சுற்றுப்பயணத்தின்போது புதிய கேப்டனாக சவுதி கேப்டன் பொறுப்பு ஏற்க உள்ளார்.

இது குறித்து கேன் வில்லியம்சன் பேசுகையில்,

அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவது இது நேரம் சரியான நேரமாக இருக்கும் என்று நினைக்கிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூசிலாந்து கேப்டனாக இருந்தது நம்பமுடியாத சிறப்பு மரியாதை. டெஸ்ட் கிரிக்கெட்டில் அணியை வழிநடத்துவது மிகவும் சவாலானது.

அந்த சவால்களை நான் அனுபவித்திருக்கிறேன் என்றார். வில்லியம்சன் 2016ம் ஆண்டு, பிரெண்டன் மெக்கல்லத்திடமிருந்து கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொண்டதிலிருந்து இதுவரை 38 போட்டிகளின் நியூசிலாந்து (22 வெற்றி, 8 டிரா, 10 தோல்வி) டெஸ்ட் அணிக்கு கேப்டனாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.