”கண்டா வரச்சொல்லுங்க” யார் இந்த பாடகி கிடாக்குழி மாரியம்மாள்?

Karnan music dhanush
By Jon Feb 26, 2021 02:00 AM GMT
Report

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘கர்ணன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற 'கண்டா வரச் சொல்லுங்க...' என்ற பாடல் சமீபத்தில் வெளியானது. நாட்டுப்புற பாடகி கிடாக்குழி மாரியம்மாள் குரலில் வெளியான இப்பாடல், யூ-டியூப்பில் வைரல் ஹிட் அடித்துள்ளது.

யார் இந்த கிடாக்குழி மாரியம்மாள்? சிவகங்கை மாவட்டம் திட்டக்குடி என்ற கிராமத்தில் பிறந்தவர் மாரியம்மாள், சிறுவயதிலிருந்தே பாடுவதில் இவருக்கு ஆர்வம் அதிகம். இளங்கன்று பயமறியாது என்பதற்கேற்ப சிறுவயதிலிருந்தே விளையாட்டுத்தனமாக பாடல்களை பாடி வந்தவருக்கு, சாவு வீடுகளில் முதல் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

ஊர் ஊராகச் சென்று ஒப்பாரி பாடிக் கொண்டிருந்த இவர் அதன்பின்னர் கரகாட்டம் ஆட துவங்கி இருக்கிறார். மேடை கச்சேரிகள், நாட்டுப்புற பாடல்கள், ஒரு சில சினிமா பாடல்கள் பாடியிருந்தாலும், 50 வயதுக்கு பின்னரே கண்டா வரச்சொல்லுங்க பாடல் மூலம் வெளிஉலகுக்கு தெரிய வந்திருக்கிறார்.

\

இதுகுறித்து அவர் கூறுகையில், இதுதான் உண்மையான வெற்றி. அதே நேரத்தில் என்னுடைய முதல் வெற்றியும் இதுதான். இனி தொடர்ந்து வெற்றி பெறுவேன். புகழுக்கு காரணம் இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆகியோரையே சேரும்.

இந்த புகழ் பத்து விருதுகள் கொடுத்தது போன்ற சந்தோஷத்தை நான் உணர்கிறேன், எல்லோரும் பாட்டு நல்லா இருக்குன்னு வாழ்த்துறாங்க என சந்தோஷத்துடன் தெரிவித்துள்ளார்.