பிரபல ரவுடி படைப்பை குணாவின் மனைவி ஸ்ரீபெரும்புதூரில் கைது
தொழில் நகரமாக விளங்கும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரவுடிகள் அட்டகாசம் கடந்த சில வருடங்களாக இருந்து வருகிறது.
அதிலும் குறிப்பாக ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் பகுதிகளில் நாளுக்கு நாள் ரவுடிகளின் அட்டகாசம் பெருகி வருகிறது.
இந்நிலையில் சென்னை புறநகர் மாவட்டங்களாக உள்ளாகும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரியாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வெள்ளத்துரை நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் ரவுடிகளை ஒதுக்குவதற்கு சிறப்பு தனிப்படைகளை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளிவந்த படப்பை குணா திடீரென தலைமறைவானார். அதனைத் தொடர்ந்து அவரை கைது செய்ய பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் தோல்வியில் முடிந்துள்ளது.
இதனை அடுத்து அவருடைய ஆதரவாளர்களை கைது செய்யும் முயற்சியில் காவல்துறை ஈடுபட்டு வருகின்றனர்.
படப்பை குணாவிற்கு வலது கரமாக செயல்பட்டு வந்த போந்தூர் சிவா என்பவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அதே வழக்கில் போந்தூர் சேட்டு என்பவரையும் தற்போது தேடி வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய வார்டு கவுன்சிலர் பதவிக்கு சுயேச்சையாக போட்டியிட்டு குணாவின் மனைவி எல்லம்மாள் வெற்றி பெற்றார்.
அவர் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் உடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.
இந்நிலையில் இன்று காலை ஸ்ரீபெரும்புதூர் மதுரமங்கலம் இல்லத்தில் எல்லம்மாள் இருந்தபொழுது தனிப்படை காவல்துறையினர் வழக்கு விசாரணைக்காக
அவரை சுங்கா சத்திரம் காவல் நிலையத்திற்கு கைது செய்து அழைத்து சென்றனர். அவருடன் அவருடைய உறவினர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
படப்பை குணாவின் மனைவி எல்லம்மாள் மீதும் சில வழக்குகள் உள்ளன . தற்போது சுங்காச்சத்திரம் காவல் நிலையத்தில் அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.