கொரோவின் கோரத்தாண்டவம்: காஞ்சிபுரம் மருத்துவமனையில் ஒரே நாளில் 11 பேர் உயிரழப்பு

Corona Death Tamil Nadu
By mohanelango May 07, 2021 08:20 AM GMT
Report

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 3 பெண்கள் உட்பட 11 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்தனர்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகின்றது. அதிலும் குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்கள் கொரோனா தொற்றால் மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் 375 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் உள்ளது. இவை அனைத்தும் முழுமையடைந்து கொரோனா வைரஸ் நோயாளிகள் மூச்சு திணறலுடன் வந்தால் அவர்களுக்கு படுக்கை வசதி இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று ஒரே நாளில் சிகிச்சை பலனின்றி வனராணி, சரோஜா, மல்லிகா, தனலட்சுமி , சுந்தரேசன், ராமசுந்தரம், சங்கரன், நடராஜன், வில்வநாதன், நித்தியானந்தம் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த அனைவரும் 50 வயதிற்கு மேற்பட்டவர்கள்.

கொரோவின் கோரத்தாண்டவம்: காஞ்சிபுரம் மருத்துவமனையில் ஒரே நாளில் 11 பேர் உயிரழப்பு | Kanchipuram Gh Faces 11 Corona Deaths In One Day

ஒரே நாளில் 11 பேர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்த சம்பவம் காஞ்சிபுரத்தில் மிகுந்த பரபரப்பை உண்டாக்கியது.இதேபோல் நேற்று ஏழு நபர்கள் கொரோனா வைரஸ் தாக்குதலால் சிகிச்சை பலனின்றி இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் 375 ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை வசதிகள் உள்ளது என தவறான புள்ளி விவரங்களை மாவட்ட ஆட்சியருக்கு மருத்துவமனை நிர்வாகம் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட வர்களின் பற்றாக்குறையால் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சீரிய சிகிச்சை அளிக்க முடியவில்லை என சமூக ஆர்வலர்கள் வேதனைப்படுகின்றனர்.