சங்கர மடத்திற்கு வருகை தந்த சசிகலா
சசிகலா அவர்கள் திடீரென சங்கர மடத்திற்கு வருகை தந்துள்ளது தற்பொழுது பேசுபொருளாராக மாறியுள்ளது. சசிகலா அவர்கள் சொத்து குவிப்பு வழக்கில் கடந்த நான்கு ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்த அவர் கடந்த ஜனவரி மதம் விடுதலையானார். முன்னதாக அவர் சிறையில் இருந்து விடுதலையாக ஒரு சில நாட்கள் இருந்த நிலையில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உடல்நிலை தேறினார். பின்னர் தீவிர அரசியலில் ஈடுபடப்போகிறர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரது ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிக்கை வெளியிட்டார். அதன் பிறகு அவர் அரசியல் சம்மந்தப்பட்ட எந்த பேச்சையும் எடுக்காமல் ஒதுங்கியே இருந்தார்.
இந்நிலையில், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் இன்று சாமி தரிசனம் செய்தார் சசிகலா. இதன்பின் காஞ்சி சங்கர மடத்துக்கு வந்தார். அங்கு மஹாஸ்வாமிகள் பிருந்தாவனத்தில் காவி நிறந்த வஸ்திரங்களை சுவாமிகளுக்கு கொடுத்தார். நவலட்சுமிகள் அடங்கிய வெள்ளி பலகையை சசிகலாவுக்கு வழங்கி சங்கராச்சாரியார் விஜயேந்திரர் ஆசி வழங்கினார்.
அதன் பின்னார் சசிகலாவுடன் விஜயேந்திரர் உரையாடிக் கொண்டிருந்தார். இந்த சந்திப்பின் பொது சசிகலாவின் குடுமபத்தினர் மட்டும் உடனிருந்தனர்.