பாகிஸ்தான் பிரபல கிரிக்கெட் வீரர் கம்ரான் அக்மல் ஓய்வு - வெளியான தகவல்...! - சோகத்தில் ரசிகர்கள்...!

Cricket Pakistan national cricket team
By Nandhini Feb 08, 2023 06:48 AM GMT
Report

பாகிஸ்தான் பிரபல கிரிக்கெட் வீரர் கம்ரான் அக்மல் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 

வீரர் கம்ரான் அக்மல் ஓய்வு

தேசிய தேர்வுக் குழுவில் இடம் பெற்ற பிறகு, பாகிஸ்தான் அணியின் மூத்த விக்கெட் கீப்பர் கம்ரான் அக்மல் அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்துள்ளார்.

இதனையடுத்து, 41 வயதான அவர், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் (பிசிபி) நிர்வாகப் பொறுப்புகளை ஏற்க ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். அக்மல் முன்னதாக PSLன் வரவிருக்கும் பதிப்பிற்கு பாபர் அசாம் தலைமையிலான பெஷாவர் சல்மியின் பேட்டிங் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.

அக்மல் 2002ல் பாகிஸ்தான் கிரிக்கெட் உலகில் அறிமுகமானார். 2002 - 2017ம் ஆண்டு வரை பாகிஸ்தானுக்காக விளையாடியுள்ளார். இதுவரை 53 டெஸ்ட், 157 ஒருநாள் மற்றும் 58 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். வலது கை பேட்டரான இவர் 2648, 3236 மற்றும் 987 ரன்களை 11 சதங்கள் மற்றும் 27 அரைசதங்களை எடுத்துள்ளார்.

இவர் கடைசியாக ஏப்ரல் 2017ம் ஆண்டு கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் மைதானத்தில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடினார்.

இதுவரை பாகிஸ்தான் அணிக்காக, 268 சர்வதேசப் போட்டிகளில் கம்ரான் அக்மல் விளையாடியுள்ளார். 2020ம் ஆண்டு அக்டோபர் 13ம் தேதியும், 2020-21 தேசிய டி20 கோப்பையில் கம்ரான் அக்மல், 20 ஓவர் கிரிக்கெட்டில் 100 ஸ்டம்பிங் செய்த முதல் விக்கெட் கீப்பரானார். 

kamran-akmal-announced-retirement-cricket