பாரு, கம்ருதீன் மேல தப்பே இல்லை - ஒரே போடுபோட்ட வியானா!
வி.ஜே. பார்வதி மற்றும் கமருதீன் என இருவரையும் ஆதரித்து வியானா கருத்து தெரிவித்துள்ளார்.
ரெட் கார்டு
பிக்பாஸ் தமிழ் 9 இல் இருந்து பார்வதி மற்றும் கமருதீன் என இருவரையும் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றி விட்டார். இந்நிலையில் இந்த சீசன் போட்டியாளர்களில் ஒருவரான வியானா, "நேற்று பிக் பாஸில் நடந்த சம்பவத்திற்காக வருந்துகிறேன்.

கார் டாஸ்க் பார்த்தேன். சாண்ட்ராவிற்காக மிகவும் வருந்தினேன். ஆனால் டிக்கெட் டு ஃபினாலேவின் இரண்டாவது டாஸ்க்கிலும் போட்டியாளர்கள் இது போன்று வன்முறையாகத்தான் விளையாடினார்கள். “இது தான் கேம் பிளே செய்யும் முறை” என்று போட்டியாளர்கள் அவர்களை நியாயப்படுத்தி கொண்டார்கள்.
ஆனால் கார் டாஸ்க்கில் மட்டும் வேறு விதமாக போட்டியாளர்கள் பேசுகிறார்கள். கார் டாஸ்க் இப்படி விளையாடக் கூடாது என்று இருந்தால் பிக்பாஸ் டாஸ்க்கை நிறுத்தி இருப்பார். ஆனால் அவர் அதனை செய்யவில்லை.
Face Task, Thoppi Task, Captaincy Task, Coin Task, Juice Task என அனைத்து டாஸ்க்கிலும், சில போட்டியாளர்கள் மிகவும் அதிரடியான முறையில் விளையாடினார்கள். அப்போது யாரும் அதைப் பற்றி பேசவில்லை.
வியானா ஆதரவு
இப்போது, ஒரு சில போட்டியாளர்கள் கார் டாஸ்க் சம்பவத்தை பெரிய விஷயமாக மாற்றி பேசுகிறார்கள். வேறு ஒருவர் இதே செயல்களை செய்திருந்தால், அது சாதாரணமாக எடுத்துக்கொண்டிருப்பார்கள். எல்லாமே யார் இதனை செய்கிறார் என்பதில் தான் இருக்கிறது" என்று பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவிற்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், "நான் இங்கு யாரையும் குறிப்பிட்டு ஆதரிக்கவில்லை. நான் பிக் பாஸ் வீட்டின் உண்மை நிலவரத்தை எடுத்து சொன்னேன். எப்படி சம்பவங்கள் சில குறிப்பிட்ட கதைக்களங்களுக்கு ஏற்ப மாறி காட்டப்படுகின்றன என்பதையே சொல்கிறேன்.
முடிவில், ஒவ்வொருவரும் தங்களுடைய விளையாட்டை ஆடுகிறார்கள். இப்போது எதிர்வினை தெரிவிக்கும் போட்டியாளர்கள் அதிரடியான முறையில் விளையாடி, மற்றவர்களை தாக்கியும் இருக்கிறார்கள்" என்று விளக்கம் தெரிவித்துள்ளார்.