காமராஜருக்கும் எம்ஜி ஆரின் மனைவிக்கும் இடம் கொடுக்க விடாமல் தடுத்தாரா கருணாநிதி! நடந்தது என்ன?
முதல்வர் பழனிசாமி தனது தேர்தல் பரப்புரையின் போது மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆரின் மனைவி ஜானகி அம்மாள் இறந்தபோது அவருக்கு மெரினாவில் அடக்கம் செய்ய இடம் வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியிடம் கோரிக்கை வைத்ததாகவும், அதற்கு பதிலளித்த கருணாநிதி, மறைந்த முதலமைச்சர்களுக்கு மெரினாவில் அடக்கம் செய்ய இடமளிக்க முடியாது என கூறியதையும் நினைவு படுத்தினார்.
அதேபோல காமராஜர் இறந்த பொழுது அதே காரணத்தை கூறி மெரினாவில் அவரை அடக்கம் செய்ய கருணாநிதி மறுத்துவிட்டதாகவும் சுட்டிக் காட்டி பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சருக்கு மெரினாவில் இடம் அளிக்க முடியாது என்ற அடிப்படையில் தான் கருணாநிதிக்கு மெரினாவில் அடக்கம் செய்ய இடம் அளிக்க வழிவகை இல்லை என்று, தான் தெரிவித்ததாகவும் விளக்கமளித்தார்.
இந்த நிலையில், காமராஜருக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்க கருணாநிதி இடமளிக்கவில்லை என்பதுதான் தன் பேசு பொருளாகியுள்ளது. உண்மையில் நடந்தது என்ன ( விகடன் செய்தி குறிப்பு) அக்டோபர் 2, காமராஜர் மறைந்த அன்று சோகமே உருவாக, அப்போதைய முதல்வர் கருணாநிதியும், அவர் அமைச்சரவை சகாக்களும் அவரது உடலை சூழ்ந்து அமர்ந்திருந்தனர்.
அப்போது காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள், தேனாம்பேட்டை காங்கிரஸ் அலுவலகத்திலேயே காமராஜர் உடலை பொதுமக்கள் பார்வைக்கு வைத்து, மற்ற சம்பிரதாயங்களையும் அங்கேயே நடத்த திட்டமிட்டனர். முதல்வர் கருணாநிதியின் காதுகளுக்கு இந்த தகவல்போனது.

கொதித்து போனா கருணாநிதி காமராஜர் ஒரு கட்சியின் தலைவர் மட்டுமல்ல. இந்த தேசத்தின் சொத்து, அவரது உடலை ராஜாஜி ஹாலில் வைத்து அரசு முறைப்படிதான் தகனம் செய்யவேண்டும்" என்றார். அப்போது குறுக்கிட்ட அதிகார் ஒருவர், காமராஜர் தற்போது எந்த பொறுப்பிலும் இல்லை , ஆகவே அரசு மரியாதை செலுத்த மத்திய அரசிடம் அனுமதி பெறவேண்டியது அவசியம் என கூறினார்.
மீண்டும் கோபத்துடன் குறுக்கிட்ட கருணாநிதி, " நான் சொன்னதை செய்யுங்கள்...மேலும் காமராஜரின் உடலை கிண்டியில் உள்ள அரசுக்கு சொந்தமான ராஜாஜி நினைவகம் அருகில்தான் அடக்கம் செய்யவேண்டும்காமராஜருக்கு இறுதி மரியாதை செய்வதற்கு நாம் யாரிடமும் போய் அனுமதி கேட்க வேண்டிய அவசியமில்லை என கூறினார்.

மேலும், காமராஜரின் உடல் குடும்ப வழக்கப்படி எரிக்கப்பட்டது. யாரும் புதைக்க இடம் கேட்கவில்லை. உண்மை தெரியாமல் முதலமைச்சர் பேசுவதாக காமராஜரின் பேத்தி மயூரி கூறியுள்ளார்.
அதேபோல ஜானகி இறந்த பிறகு ஜானகி தரப்பிலிருந்தோ, அப்போது அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதாவோ கருணாநிதியிடம் அடக்கம் செய்ய இடம் கேட்கவில்லை என்பதே வரலாறு சொல்லும் உண்மை.
ஒரு மாநிலத்தின் முதலமைச்சரே ஓட்டுக்காக வரலாறு தெரியாமல் பேசுவது வேடிக்கையாக இருப்பதாக அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.